ஜப்பான் நாட்டை சேர்ந்த Pseudo scientist மாசறு எமோட்டோ(Masaru Emoto) என்பவர் ,நம் எண்ணங்களுக்கு அதிக சக்தி இருக்குறது என்றும் ,நம் எண்ணங்களின் மூலமா நமக்கு ஏற்படும் உணர்வு மற்றும் நாம் பேசும் வார்த்தைகள் தான் நம் வாழ்வை வடிவமைக்கிறது என உறுதியாக இருந்தார். இதை நிரூபிக்க அவர் எடுத்துக்கொண்ட கருவி
"நீர் "
நீர் இன்றி அமையாது உலகு ,நம் பூமி 70 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டது .
நீருக்கு நாம் நினைப்பதை விட சக்தி அதிகம் .
சரி ,கமிங் பேக் டு டாபிக், எமோட்டோ தண்ணீரை அடிப்படையாய் வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்.
இரண்டு கண்ணாடி நீர் குடுவையில் அன்பு(Love) ,நன்றி(Thank you) போன்ற நேர்மறை வார்த்தைககளை குடுவையின் உட்புறத்தில் ஒட்டி ,
அதே போல் "நீ ஒரு முட்டாள்"," உன்னால் முடியாது " போன்ற எதிர்மறை வார்த்தைகளை மற்றோரு குடுவையின் உட்புறத்தில் ஒட்டி,
அவைகளில் நீரை நிரப்பி ,சில மணி நேரம் கழித்து அந்த தண்ணீரை உறைய வைத்து,அதை மைக்ரோஸ்கோப் வழியாக பார்க்கும்போது ,
நேர்மறை எழுத்துக்களை எழுதிய குடுவையின் நீர் படிகள்(Water Crystals) அழகிய Symmetrical வடிவத்தோடும் ,எதிர்மறை எழுத்துக்களை எழுதிய குடுவையின் நீர் அகோரமாக unsymmetrical வடிவத்தை பெற்றிருந்தன.
அதே போல் நேர்மறை மற்றும் எதிர்மறை வார்த்தைகளை நீரின் முன்பு வெளிப்படுத்தும் போதும்,நேர்மறை வார்த்தைகளுக்கு அழகிய வடிவமும் ,எதிர்மறை வார்த்தைகளுக்கு கோர வடிவமும் மைக்ரோஸ்கோப்பில் காணப்பட்டது.
நம் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை நீரால் கிரகிக்க முடிகிறது, நம் எண்ணங்களால் நீரின் மூலக்கூறுகளில்(Water Molecules) தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,தண்ணீருக்கு உணர்வு உண்டு என மிக முக்கியமான கண்டுபிடிப்பை எமோட்டோ கண்டுபிடித்தார்.
ஜப்பான் நாட்டில் பியூஜிவாரா அணை(Fujiwara Dam) மிகவும் மாசு படிந்து துர்நாற்றம் வீசியது .அந்த அணையின் நீர் மாதிரியை எடுத்து, எமோட்டோ பரிசோதித்தபோது ,நீர் படிகள் அகோர வடிவத்தில் இருந்தது.
சில புத்த துறவிகளை அணைக்கு அழைத்து சென்று ,பிராத்தனை தியானம் போன்று நேர்மறை எண்ணங்களை விதைத்து ,பிறகு அந்த நீரை பரிசோதித்தபோது ,நீர் படிகள் அழகிய வடிவைத்த பெற்றதாம்.துர்நாற்றம் நாளடைவில் குறைந்ததாம்.
மனிதனின் எண்ணங்கள், தன்னை மட்டும் அல்லாமல் தன்னை சுற்றிருப்பவர்களையும் ,சுற்றுசூழலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எமோட்டோ தான் எழுதிய "Hidden Messages in Water","The Miracle of Water","Water Crystal Healing" புத்தகங்களின் மூலம் தெரிவித்தார்.
மேலே கூறியது போல் ,நம் உடலும் 60 % நீரால் ஆனதே .நம் எதிர்மறை எண்ணங்கள் ,நம் உடலை பாதித்து Psychosomatic disorders அதாவது மனநிலை கோளாறுகள் உண்டாகி பல நோய்களுக்கு காரணிகளாகிறது.
இதெல்லாம் படித்த உடன் நீங்கள் ஆச்சர்யபட்டிருப்பீர்கள்,ஆனால் இந்த கண்டுபிடிப்பு அறிவியலாளர்களால் அங்கீகரிக்கப்படவில்லை எந்த ஒரு experiment உம் அறிவியலால் நிரூபித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்,
ஆனால் இவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்போ ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த மாதிரியானது அறிவியலாளர்கள் சொல்வது என்னவென்றால் நீங்கள் தண்ணீரை ஒவ்வொருமுறை உறைய வைக்கும் போதும் ஒவ்வொரு முறையும் வேறுமாதிரியான வடிவமைப்பை காட்டும்.இதனால் இந்த water experiment அறிவியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
இவர் இதே போன்று அரிசியிலும் சில experiments செய்து காண்பித்தார் வேக வைத்த அரிசியை மூன்று ஜாடியில் வைத்து அதன் மேலும் Love, Hate, Ignore என்று எழுதி வைத்து செய்தார் ஆனால் அதன் முடிவுகளும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருந்தது..இதே போன்று உன் குழாயில் இந்த experiment செய்யப்பட்ட வீடியோக்கள் நிறைய உள்ளன.
Mr. வண்டு….Masaru emoto செய்த water experiment pseudo science காவே இருக்கட்டும்.. உண்மையிலேயே எண்ணம் போல் வாழ்க்கை scientific ஆ காரணம் ஏதும் ஒன்னு இருக்கா?
டோபாமின் மற்றும் கார்டிசோல் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ??
மனித மூளையை Complicated Organ என்று அழைப்பார்கள் .நம் மூளையில் கிட்டத்தட்ட 100 பில்லியன் நியூரான்ஸ்(Neurons) உள்ளன.
டோபாமின் எனும் ஹார்மோன் நம் உடலில் பல பணிகளை செய்கிறது. மிக முக்கியமாக, நம் மூளைக்கு நியூரோவ் டிரான்ஸ்மிட்டராக(Neuro Transmitter) பணி செய்கிறது.
எளிதாக கூறவேண்டும் என்றால்,நம் மூளையில் உள்ள நியூரான்ஸ்களுக்கு இடையே சிக்னலை பரிமாறும் ஒரு மெஸ்சேன்ஜ்ர்(messenger) பணி .
எப்படி மாணிக்கத்திற்கு ,பாட்ஷா என்ற இன்னொரு பெயர் இருக்குறதோ,அதே போல் டோபாமின்னுக்கும் இன்னொரு பெயர் உண்டு .ஹாப்பி ஹோர்மோன்(Happy hormone) என்ற பெயர்.It is a feel good hormone.
உங்கள் எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால் ,இந்த டோபாமின் ஹோர்மோன் உங்கள் மூளையின் செயல்திறனை அதிக படுத்தும். தன்னம்பிக்கை ,Self Motivation,தெளிவான சிந்தனை போன்ற அனைத்து நல்ல விடயங்களும் உங்களுக்கு உங்களின் மூளையின் உதவியால் ஆக்டிவேட் ஆகி விடும்
கார்டிசோல் , அட்ரீனல் சுரப்பியில் உண்டாகும் ஒரு ஹோர்மோன்.இதற்கும் நம் உடலில் பல பணிகள் உண்டு .நீங்கள் நேர்மறையாக சிந்திக்கும் வரை எந்த சிக்கலும் இல்லை ,நீங்கள் எதிர்மறையாக எண்ணினால் இந்த ஹார்மோன் ட்ரிகர் ஆகிவிடும் .அது நேராக உங்கள் நரம்பு மண்டலத்தை(Central Nervous system) தாக்கும்.
எளிதாக கூறவேண்டும் என்றால்,கார்டிசோல், மூளையின் முக்கியமான பாகங்களில்( peripheral cortex) பாதிப்பை ஏற்படுத்தும்.அதாவது உங்களது சிந்திக்கும் திறன், மன்னிக்கும் தன்மை,பகுப்பாய்வு,Problem solving போன்ற முக்கியமானவற்றை முழுவதும் shut down செய்து விடும். இதனால்,
மன அழுத்தம் உண்டாகி பல நோய்களுக்கு வித்திடும்.
மேலும் ,இதனால் தான் கோபத்தில் நாம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கூறுகின்றனர்.
டோபாமின் மற்றும் கார்டிசோல் இரண்டும் உடலில் சரியான அளவில் இருக்கும் வரைக்கும் சிக்கல் இல்லை.அளவுக்கு மீறினால் ஆபத்தே .
உதாரணம் : நாம் ஒவ்வொரு வரும் சில விடயங்களை பிடித்து மிக ஆர்வமாக செய்வோம்.பிறகு அதற்கு அடிமையாகி விடுவோம் அல்லவா .இதற்கு காரணம் ,அளவுக்கு அதிகமான டோபாமின் தான்.
அதே போல் ,கார்டிசோல் அளவு அதிகமானால், ஏற்கனவே கூறியது போல் மன அழுத்தத்தில் தொடங்கி,பல நோய்கள் உண்டாகும்.
சரி,இப்போது ,நம் எண்ணங்களின் சக்தியை உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
மறந்துவிடாதீர்கள் ,உங்கள் எண்ணத்திற்கு அதிக சக்தி உண்டு :)
நல்லதே நினைப்போம் ,நல்லதே நடக்கும் :)
எண்ணம் போல் வாழ்க்கை :)
No comments:
Post a Comment