Wednesday, 17 June 2020

Man of the Millennium

இந்த நூற்றாண்டின் மாமனிதரை பற்றிய பதிவிது :)

1940 ஆம் ஆண்டு,திருநெல்வேலி மாவட்டம் ,மேலக்கருவேலங்குளம் என்கிற குக்கிராமத்தில்,இவர் பிறந்தார்.தன்னுடைய முதலாம் அகவையிலேயே தந்தையை இழக்க,அம்மா தான் இவரையும் இவர் அண்ணனையும் வளர்த்தாங்க.

இவர் ஊர்ல சாலை வசதிகள் இல்லை,பள்ளிக்கூடம் இல்லை,அவசரத்துக்கு தீப்பெட்டி வாங்க கூட ஒரு பெட்டிக்கடை கிடையாது ,போக்குவரத்து வசதி எதுவும் இல்ல,அவ்வளவு ஏன், மின்சாரமே கிடையாது.ஊர்ல மொத்தமாவே 35 வீடுகள் தான்.

தினமும் பள்ளிக்கு செல்ல 10 கிலோமீட்டர் நடந்தே போகணும் .இரவு மண்ணெண்ணெய் விளக்குல தான் பள்ளிப்பாடம் படித்தார்.

பள்ளிப்படிப்பை முடிச்சதுக்கு அப்புறம் ,கல்லூரி படிப்பில்,இளங்கலை படித்தபின், முதுநிலை படிக்க தமிழை விருப்பப்பாடமாக தேர்தெடுத்தார்.

ஆனால்,கல்லூரில் இவர் மட்டுமே தமிழை தேர்ந்தெடுத்ததால்,கல்லூரி நிர்வாகம் இவரை வேறு ஏதாவது பாடத்தை தேர்ந்தெடுக்கும் படி கேட்டுக்கொண்டது.ஆனால் ,இவரோ தமிழ் தான் படிப்பேன் என விடாபிடியாக தமிழை படித்தார்.

கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது,இந்தியா சீனா போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில்,வானொலியில் ,நம் நாட்டின் முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பேச்சை கேட்டு ,தன்னிடம் இருந்த 8 சவரன் தங்க சங்கிலியை தேசிய பாதுகாப்பு நிதிக்காக அன்றைய முதலமைச்சர் காமராஜரிடம் கொடுத்து அவரின் பாராட்டை பெற்றார்.

பிறகு நூலக அறிவியல் படித்து ,தங்க பதக்கம்(Gold Medalist ) பெற்றார்.

1963 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ,திருவைகுண்டத்தில் உள்ள , ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் நூலகரா பணியில் சேர்ந்து ,கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

35 ஆண்டுகள் ,அதாவது 420 மாதம் ,மாதமாதம் தன் சம்பள பணம் அனைத்தையும் ,ஏழை குழந்தைகள் படிப்பிற்காக,வைத்திய செலவிற்காகவும், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துவிடுவார். அவர் 30 ஆண்டு சம்பாதித்த பணம் 30 லட்சம் !!! 30 லட்சமும் ஏழை குழந்தைகளுக்காகவே !!

சரி,மொத்த சம்பளத்தையும் சேவைக்காக கொடுத்துவிட்டால் ,அவரின் உணவு மற்றும் இதர செலவுக்கு பணம் தேவைப்படும் தானே ? அதனால் கல்லூரி முடிந்ததும்,மாலை வேலையில்,ஆர்யாஸ் உணவகத்தில் சர்வராக பணிபுரிந்தார்.

கல்லூரி விடுமுறை நாட்களில் காலையிலும் பணி செய்தார்.மாத சம்பளம் 600 ரூபாய்,மூன்று வேல உணவும் ,தங்க இடமும் கிடைத்தது,அவருக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

இப்படி தன் வாழ்நாள் முழுவதையுமே ஏழை குழந்தைகளாகவே அர்ப்பணித்தார்.இந்த அர்பணிப்பின் காரணமாக இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவர் பெற்ற விருதுகளை பட்டியல் இடுகிறேன் :

இந்திய அரசாங்கத்தால்,இந்தியாவில் சிறந்த நூலகர் விருதை பெற்றார்.

உலகப்புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ,இவருக்கு "Noblest Man of the World " விருதை கொடுத்தது.

இருபதாம் நூற்றாண்டின் மிக சிறந்த மனிதர் என்று United Nations அறிவித்தது.

ஒரு அமெரிக்கா நிறுவனம் ,இவருக்கு "Man of the Millennium " விருதை குடுத்து,இந்திய மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய் பணமும் பரிசாக குடுத்தது.அந்த 30 கோடியையும் ,ஏழைகளுக்காகவே கொடுத்துவிட்டார்.

இவர் அளித்த பேட்டியில், அவரின் கருத்துக்களை பகிர்கிறேன் .

" என் அம்மா எனக்கு மூணு பாடங்களை சொல்லிகொடுத்திருக்காங்க.

முதல் பாடம் - எதற்கும் பேராசை படாதே.

இரண்டாம் பாடம் - எது கிடைத்தாலும் பத்தில் ஒரு. பங்கு இல்லாதவர்களுக்கு கொடு.

மூன்றாவது பாடம் - தினமும் ஒரு உயிருக்கு நன்மை செய்தால் வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக இருக்கலாம்.

இது தான் அம்மா எனக்கு சொல்லி கொடுத்த பாடம்.

அன்பு என்பது மனிதர்களிடம் வைக்கும் அன்பு மட்டும் அல்ல, எல்லா உயிரினங்கள் கிட்டயும் வைக்கணும்.அந்த அன்பு வச்சா மட்டும் தான் வாழ்க்கையில உண்மையாகவே சந்தோசமாக வாழ முடியும்.

நமக்காகவே வாழாம ,எப்போ மத்தவங்களுக்காகவும் வாழ ஆரம்பிக்கிறோமோ அப்போ தான் நமக்கு ஒரு இன்பமான வாழ்க்கை நிலையா கிடைக்கும்.

எனக்கு பணத்தின் மீது எந்த ஈர்ப்பும் இல்லை.ஒருத்தருக்கு பணம் மூணு விதத்துல கிடைக்கும்.

ஒன்னு மூதாயர்கள் சேர்த்து வைத்த பரம்பரை சொத்து 

இரண்டாவது சுய உழைப்பால் சம்பாதித்த பணம் 

மூணாவது பிறர் மூலம் அன்பளிப்பாக டொனேஷனாக கிடைக்கும் பணம்.

ஆனால் எவ்வளவு தான் நம்ப சம்பாரிச்சாலும்,சம்பாரித்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து அதுல கிடைக்கிற மனத்திருப்தி வேற எதுலயும் கிடைக்காது ".என கூறினார்.

இவரின் சேவை குணத்தால் காமராஜர் ,MGR ,நெல்சன் மண்டேலா,பில் கிளின்டன்,அப்துல் கலாம் அய்யா,மன்மோகன் சிங் போன்ற தலைவர்களின் பாராட்டையும் பெற்றார்.

என்னை பொறுத்தவரை இந்த நூற்றாண்டின் மாமனிதர் இவரே.

தற்போது பாலம் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழைகளுக்கு சேவையாற்றி வருகிறார்.

" என்னால் இந்த வயதில் உழைத்து ஏழைகளுக்கு சேவை செய்ய முடியவில்லை,ஆதலால் இருப்பவர்களிடம் இருந்து இல்லாதவர்களுக்கு உதவிகளை சென்றடைய ஒரு பாலமாக இருந்து வருகிறேன் " என்றார்.

Man of the Millennium,அய்யா திரு."பாலம்"கல்யாணசுந்தரம்

நன்றி :)

1 comment:

Man of the Millennium

இந்த நூற்றாண்டின் மாமனிதரை பற்றிய பதிவிது :) 1940 ஆம் ஆண்டு,திருநெல்வேலி மாவட்டம் ,மேலக்கருவேலங்குளம் என்கிற குக்கிராமத்தில்,இவர் பிறந்தார்....